• Nov 13 2025

2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

Chithra / Nov 10th 2025, 10:28 am
image


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி உள்ளது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. 

இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். 


அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. 

இம்முறை உயர்தர பரீட்சைக்கு முல்லைத்தீவில் 1570 பாடசாலை பரீட்சார்த்திகள், 401 தனியார் பரீட்சார்த்திகளும் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 19 பரீட்சை மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


 

இதேவேளை வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்றனர்

வவுனியா மாவட்டத்தில் 20 பரீட்சை நிலையங்களில் 2455 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 1865 மாணவர்கள் முதல் தடவையாக பாடசாலைகளூடாகவும் 590 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும் பரீட்சையில் தோன்றுகின்றனர்.

இன்று காலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 


கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மூதூர் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றது.


ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள தோட்ட, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், வெளிமாநில பரீட்சார்த்திகளும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக மிகுந்த ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.

ஹட்டன் உயர்தரப் பரீட்சை நடைபெறும் அனைத்துப் பரீட்சை மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பரீட்சை மையங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு நடமாடும் பொலிஸ் ரோந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.


2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி உள்ளது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. இம்முறை உயர்தர பரீட்சைக்கு முல்லைத்தீவில் 1570 பாடசாலை பரீட்சார்த்திகள், 401 தனியார் பரீட்சார்த்திகளும் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 19 பரீட்சை மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்றனர்வவுனியா மாவட்டத்தில் 20 பரீட்சை நிலையங்களில் 2455 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 1865 மாணவர்கள் முதல் தடவையாக பாடசாலைகளூடாகவும் 590 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும் பரீட்சையில் தோன்றுகின்றனர்.இன்று காலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மூதூர் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றது.ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள தோட்ட, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், வெளிமாநில பரீட்சார்த்திகளும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக மிகுந்த ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.ஹட்டன் உயர்தரப் பரீட்சை நடைபெறும் அனைத்துப் பரீட்சை மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பரீட்சை மையங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு நடமாடும் பொலிஸ் ரோந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement