பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணியளவில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மின்சாரசபை மற்றும் அனைத்து அரசாங்க வளங்களை விற்பதை உடனே நிறுத்து, வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்து, தொழிற்சங்க அடக்குமுறையையும் பழிவாங்கலையும் உடனடியாக நிறுத்து, மக்களின் மின் கட்டணத்தை உடனே குறையுங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின்சாரசபைபொறியியலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்து. புத்தளத்தில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்.samugammedia பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணியளவில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மின்சாரசபை மற்றும் அனைத்து அரசாங்க வளங்களை விற்பதை உடனே நிறுத்து, வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்து, தொழிற்சங்க அடக்குமுறையையும் பழிவாங்கலையும் உடனடியாக நிறுத்து, மக்களின் மின் கட்டணத்தை உடனே குறையுங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.தமது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின்சாரசபை பொறியியலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.