• Nov 25 2024

வவுனியாவில் போராட்டத்தில் குதித்த வைத்தியசாலை சிற்றூழியர்கள்...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 3:40 pm
image

சம்பள அதிகரிப்பு , பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் இன்று(18) மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டம்,  பேரணியாக வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஏ9 வீதியூடாக வருகை தந்து வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு , பொருளாதார நீதிக்காக வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு , வருமானம் அற்ற வரிச்சுமை எதற்கு? போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன் சம்பளத்தினை அதிகரி , பதவி உயர்வு வழங்கு போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட வைத்தியசாலை சிற்றூளியர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன் ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கம் இவ் கவனயீர்ப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நோயார்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார சிற்றூழியர்கள் தமது மதிய நேர இடைவேளையின் போதே இப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







வவுனியாவில் போராட்டத்தில் குதித்த வைத்தியசாலை சிற்றூழியர்கள்.samugammedia சம்பள அதிகரிப்பு , பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் இன்று(18) மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டம்,  பேரணியாக வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஏ9 வீதியூடாக வருகை தந்து வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு , பொருளாதார நீதிக்காக வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு , வருமானம் அற்ற வரிச்சுமை எதற்கு போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன் சம்பளத்தினை அதிகரி , பதவி உயர்வு வழங்கு போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட வைத்தியசாலை சிற்றூளியர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன் ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கம் இவ் கவனயீர்ப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நோயார்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார சிற்றூழியர்கள் தமது மதிய நேர இடைவேளையின் போதே இப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement