• Nov 14 2024

ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் - இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு!

Tamil nila / Aug 4th 2024, 2:10 pm
image

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் தனது காலத்தில் நியாயமான தீர்வு வழங்கப் படும் என்று வாக்குறுதிகள் வழங்கி வந்தனர். எனினும் எந்த தீர்வும் வழங்கப் படவில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இது தொடர்பில் இன்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

தொடர்ச்சியான ஏமாற்றமே எஞ்சி வந்தது. எனவே தமிழ் மக்கள் நியாயமான தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க முன் வர வேண்டும். இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரால் வெற்றி பெறவே முடியாது என்பது நிதர்சனமாகும் இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களது ஆதரவு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாத நிலை ஏற்படும் என்கிறார்.


ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் - இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் தனது காலத்தில் நியாயமான தீர்வு வழங்கப் படும் என்று வாக்குறுதிகள் வழங்கி வந்தனர். எனினும் எந்த தீர்வும் வழங்கப் படவில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இது தொடர்பில் இன்று தெரிவித்திருந்தார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தொடர்ச்சியான ஏமாற்றமே எஞ்சி வந்தது. எனவே தமிழ் மக்கள் நியாயமான தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க முன் வர வேண்டும். இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரால் வெற்றி பெறவே முடியாது என்பது நிதர்சனமாகும் இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களது ஆதரவு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாத நிலை ஏற்படும் என்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement