• Jan 10 2025

அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி - கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இல்லாததால் மக்கள் அதிர்ச்சி!

Tharmini / Jan 7th 2025, 4:54 pm
image

அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது. அத்துடன் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது.

இந்த வீதியில் உள்ள மதகில் சுமார் இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்திலும் துவாரம் காணப்படுகின்றது. 

கொக்கிரீட்டிலான தகடு உடைந்து, அதற்குள்ளே இருந்த போக்கும் உடைந்தே இந்த குழி தோன்றியுள்ளது. இருப்பினும் கொங்கிரீட் தகட்டுக்கு உள்ளே கம்பிகள் காணப்படவில்லை என்ற விடயமானது முன்னர் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீதியால் அன்றாடம் 789 வழித்தட பயணிகள் சேவை பேருந்து பயணிப்பதுடன், வயோதிகர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் எதிரே வருகின்ற ஒரு வாகனத்துக்கு இன்னொரு வாகனம் வழிவிட்டு கொடுத்து பயணிப்பதற்கு ஏற்ற அளவில் இந்த வீதி காணப்படவில்லை. அகலத்தில் குறைந்ததாக உள்ளதுடன் இவ்வாறு குழியும் உள்ளதால் இந்த வீதியால் பயணிக்கும்போது உயிர் ஆபத்தான பயணங்களையே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், புளியம்பொக்கணைக்கு அருகே உள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால், அண்மையில் அந்த பாலத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சேதமடைந்த இந்த மதகுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகிறது.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.






அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி - கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இல்லாததால் மக்கள் அதிர்ச்சி அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது. அத்துடன் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது.இந்த வீதியில் உள்ள மதகில் சுமார் இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்திலும் துவாரம் காணப்படுகின்றது. கொக்கிரீட்டிலான தகடு உடைந்து, அதற்குள்ளே இருந்த போக்கும் உடைந்தே இந்த குழி தோன்றியுள்ளது. இருப்பினும் கொங்கிரீட் தகட்டுக்கு உள்ளே கம்பிகள் காணப்படவில்லை என்ற விடயமானது முன்னர் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த வீதியால் அன்றாடம் 789 வழித்தட பயணிகள் சேவை பேருந்து பயணிப்பதுடன், வயோதிகர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.அத்துடன் எதிரே வருகின்ற ஒரு வாகனத்துக்கு இன்னொரு வாகனம் வழிவிட்டு கொடுத்து பயணிப்பதற்கு ஏற்ற அளவில் இந்த வீதி காணப்படவில்லை. அகலத்தில் குறைந்ததாக உள்ளதுடன் இவ்வாறு குழியும் உள்ளதால் இந்த வீதியால் பயணிக்கும்போது உயிர் ஆபத்தான பயணங்களையே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், புளியம்பொக்கணைக்கு அருகே உள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால், அண்மையில் அந்த பாலத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சேதமடைந்த இந்த மதகுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகிறது.இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement