• May 20 2024

மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானதே..!மஞ்சுளாதேவி சதீசன் கருத்து..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 3:11 pm
image

Advertisement

மனித உரிமையை பெற்றுக் கொள்வதற்கு அந்த நாடுகளின் சட்டங்கள் எதிராக இருப்பினும், மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானது என  மஞ்சுளாதேவி சதீசன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மனித உரிமை தொடர்பான நல்ல கல்வியானது சிறு வயது முதலே வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே மற்றவர்களின் மனித உரிமையினை கொடுக்கின்ற பண்பினையும் தனக்கு என்ன?என்ன? மனித உரிமைகள் உள்ளன என்ற பண்பினையும் வளர்த்து கொள்ள முடியும்.

எமது தேவைகளை பெற்று கொள்வதற்காக நாம் வெளியில் சண்டை பிடித்தால் கைது செய்யப்படலாம். அல்லது அந்த உரிமையினை வழங்காது மறுக்கலாம்.

ஆகவே,  மனித உரிமை கல்வியை பெற்றவர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்தி இந்த சட்டம் தொடர்பான அறிவற்றவர்களிற்கு விளக்கமளித்து, அவர்களது பிரச்சினைகளில் துணையாக இருந்து அதிலிருந்து அவர்களை தூக்கி விடுதல்  வேண்டும்.

மனித உரிமை சட்டம் என்பது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம். ஆயினும் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையிலான சட்டமே வேறுபட்டதாக இருக்கும். இந்த நாட்டில் குற்றம் செய்தாலும் வேறு நாட்டில் தப்பித்து கொள்ளகூடிய சூழ்நிலையுள்ளது.

உரிமையை பெற்றுக்கொள்வதற்கு அந்த நாடுகளின் சட்டங்கள் எதிராக இருப்பினும், மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானதே.

சட்ட ரீதியான சில பிரச்சினைகளை சந்திக்கும் போது, நீதி மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும். சில சட்டங்களில் இருந்து மக்கள் தப்பிக்க சட்டத்திலுள்ள ஓட்டையை பயன்படுத்தி நீதியை தவற விடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானதே.மஞ்சுளாதேவி சதீசன் கருத்து.samugammedia மனித உரிமையை பெற்றுக் கொள்வதற்கு அந்த நாடுகளின் சட்டங்கள் எதிராக இருப்பினும், மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானது என  மஞ்சுளாதேவி சதீசன் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், மனித உரிமை தொடர்பான நல்ல கல்வியானது சிறு வயது முதலே வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே மற்றவர்களின் மனித உரிமையினை கொடுக்கின்ற பண்பினையும் தனக்கு என்னஎன்ன மனித உரிமைகள் உள்ளன என்ற பண்பினையும் வளர்த்து கொள்ள முடியும். எமது தேவைகளை பெற்று கொள்வதற்காக நாம் வெளியில் சண்டை பிடித்தால் கைது செய்யப்படலாம். அல்லது அந்த உரிமையினை வழங்காது மறுக்கலாம். ஆகவே,  மனித உரிமை கல்வியை பெற்றவர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்தி இந்த சட்டம் தொடர்பான அறிவற்றவர்களிற்கு விளக்கமளித்து, அவர்களது பிரச்சினைகளில் துணையாக இருந்து அதிலிருந்து அவர்களை தூக்கி விடுதல்  வேண்டும். மனித உரிமை சட்டம் என்பது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம். ஆயினும் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையிலான சட்டமே வேறுபட்டதாக இருக்கும். இந்த நாட்டில் குற்றம் செய்தாலும் வேறு நாட்டில் தப்பித்து கொள்ளகூடிய சூழ்நிலையுள்ளது. உரிமையை பெற்றுக்கொள்வதற்கு அந்த நாடுகளின் சட்டங்கள் எதிராக இருப்பினும், மனித உரிமைகள் தொடர்பான சட்டம் அனைத்து நாட்டிற்கும் பொதுவானதே. சட்ட ரீதியான சில பிரச்சினைகளை சந்திக்கும் போது, நீதி மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும். சில சட்டங்களில் இருந்து மக்கள் தப்பிக்க சட்டத்திலுள்ள ஓட்டையை பயன்படுத்தி நீதியை தவற விடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement