• Jan 19 2025

ட்ரம்பின் வரி விதிப்பால் கனடாவில் பல லட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயம் - ஒன்றாறியோ மாகாண முதல்வர்

Tharmini / Jan 15th 2025, 11:09 am
image

கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்தால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,  ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரியை விதித்தால் மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு கனடா மீது வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டால் அது பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வரி விதிப்பானது மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் எனவும் இதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி விதிக்கப்பட்டால் பெருந்தொகை செலவு மேற்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் வரி விதிப்பினை மேற்கொண்டால் மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் எழும் எனவும் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், வரிவிதிப்பு குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

ட்ரம்பின் வரி விதிப்பால் கனடாவில் பல லட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயம் - ஒன்றாறியோ மாகாண முதல்வர் கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்தால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,  ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரியை விதித்தால் மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.இவ்வாறு கனடா மீது வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டால் அது பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.இந்த வரி விதிப்பானது மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் எனவும் இதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வரி விதிக்கப்பட்டால் பெருந்தொகை செலவு மேற்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.டிரம்ப் வரி விதிப்பினை மேற்கொண்டால் மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் எழும் எனவும் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.எவ்வாறெனினும், வரிவிதிப்பு குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement