• May 09 2024

15 லட்சம் ரூபாய் மதிப்பில் மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன்!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 4:14 pm
image

Advertisement

இறந்த தனது மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வரும் கணவனின் அன்பு காண்போர் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டில் சுப்பிரமணியின் மனைவியான ஈஸ்வரி காலமானார். இதையடுத்து மனைவி இறந்ததால், சுப்பிரமணி மிகவும் மனவேதனை அடைந்தார். 

இதைத்தொடர்ந்து அவர், தனக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில், 15 லட்சம் ரூபாய் செலவில், 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவியுள்ளார்.

மேலும் கோயில் கட்டியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். மக்கள் பலரும் விவசாயி சுப்பிரமணிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, எதிர்வரும் மார்ச் 31 ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 500 பெண்களுக்கு இலவச சேலையும் அன்னதானமும் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.

15 லட்சம் ரூபாய் மதிப்பில் மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன்SamugamMedia இறந்த தனது மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வரும் கணவனின் அன்பு காண்போர் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த ஆண்டில் சுப்பிரமணியின் மனைவியான ஈஸ்வரி காலமானார். இதையடுத்து மனைவி இறந்ததால், சுப்பிரமணி மிகவும் மனவேதனை அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர், தனக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில், 15 லட்சம் ரூபாய் செலவில், 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவியுள்ளார். மேலும் கோயில் கட்டியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். மக்கள் பலரும் விவசாயி சுப்பிரமணிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, எதிர்வரும் மார்ச் 31 ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 500 பெண்களுக்கு இலவச சேலையும் அன்னதானமும் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement