• May 11 2025

வடக்கு கிழக்குக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க நான் தயாரில்லை- சரத் பொன்சேகா சூளுரை..!

Sharmi / Sep 14th 2024, 4:36 pm
image

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத்  திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்குக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க நான் தயாரில்லை- சரத் பொன்சேகா சூளுரை. நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத்  திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now