• May 08 2024

சஹ்ரானுடன் எந்த தொடர்பும் இல்லை! – நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் விசாரணைகள் - ஆதங்கப்படும் ஆமி முகம்மது samugammedia

Chithra / May 23rd 2023, 6:41 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடன் கதைப்பதற்கு ஏனையவர்கள் அஞ்சுவதாக ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

சஹ்ரான் குண்டுத் தாக்குதல் நடாத்தியதற்கு குண்டை வெடிக்கவைக்க உதவியதாக கைதுசெய்யப்பட்ட தன்னை, மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தினை காரணம் காட்டியே நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தாகவும் ஆனால் நிரபராதியாகிய தன்னை குற்றவாளிகள் போன்று நடாத்தியதாக முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் பல விடங்களை வெளியிட்டுள்ளார்.

நான் எந்த குற்றங்களும் செய்யவில்லை இருந்தும் மூன்று வருட காலமாக சிறையில் வைத்திருந்தார்கள் 

தற்போது நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்து விட்டனர் 

விடுதலை செய்தும் சமுதாயம் என்னை ஏற்க மறுக்கிறது.

நான் பழகிய ஒருவரிடம் தொலைபேசி எண்ணை கேட்டால் எனக்கு அந்த எண்ணை தர மறுக்கிறார்கள் 

இவ்வாறான ஒரு மனநிலையிலே நான் வாழ்ந்து கொண்டு வருகின்றேன்.

பாதுகாப்பு தரப்பினரால் இன்னமும் எனது வீட்டிற்கு வருகின்றனர் விசாரணைக்காக குற்றம் சாட்டப்படாத என்னை குற்றம் சாட்டப்பட்டவன் போல இன்னும் என்னை விசாரணை செய்கின்றார்கள் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கின்ற போது வீட்டில் பயப்படுகின்றனர்.

எனது முதலாவது மற்றும் இரண்டாவது மகள்கள் திருமணம் ஆகி அவர்கள் தனியாக உள்ளனர். 

தற்போதும் அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.

எமது மார்க்கத்தின் படி ஐந்து வேளை நாங்கள் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு செல்வது குற்றமா, பள்ளியில் பழுதடைந்த மின்விசிறியை திருத்தி கொடுத்தது குற்றமா, ரத்ததானம் முன்னெடுத்தனர் ரத்தம் கொடுத்தேன் அது குற்றமா, சிரமதானம் செய்தேன் அது தப்பா, இதற்காகவா என்னை மூன்று வருடம் சிறையில் அடைத்தீர்கள் இதுதான் நான் கேட்டேன்.

இன்டர்போல் தொடக்கம் என்னை விசாரணை செய்தனர் சஹ்ரானுக்கு அடுத்தது நான் தான் என சித்தரிக்கப்பட்டேன் என தனது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானுடன் எந்த தொடர்பும் இல்லை – நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் விசாரணைகள் - ஆதங்கப்படும் ஆமி முகம்மது samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடன் கதைப்பதற்கு ஏனையவர்கள் அஞ்சுவதாக ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.சஹ்ரான் குண்டுத் தாக்குதல் நடாத்தியதற்கு குண்டை வெடிக்கவைக்க உதவியதாக கைதுசெய்யப்பட்ட தன்னை, மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தினை காரணம் காட்டியே நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தாகவும் ஆனால் நிரபராதியாகிய தன்னை குற்றவாளிகள் போன்று நடாத்தியதாக முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் பல விடங்களை வெளியிட்டுள்ளார்.நான் எந்த குற்றங்களும் செய்யவில்லை இருந்தும் மூன்று வருட காலமாக சிறையில் வைத்திருந்தார்கள் தற்போது நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்து விட்டனர் விடுதலை செய்தும் சமுதாயம் என்னை ஏற்க மறுக்கிறது.நான் பழகிய ஒருவரிடம் தொலைபேசி எண்ணை கேட்டால் எனக்கு அந்த எண்ணை தர மறுக்கிறார்கள் இவ்வாறான ஒரு மனநிலையிலே நான் வாழ்ந்து கொண்டு வருகின்றேன்.பாதுகாப்பு தரப்பினரால் இன்னமும் எனது வீட்டிற்கு வருகின்றனர் விசாரணைக்காக குற்றம் சாட்டப்படாத என்னை குற்றம் சாட்டப்பட்டவன் போல இன்னும் என்னை விசாரணை செய்கின்றார்கள் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கின்ற போது வீட்டில் பயப்படுகின்றனர்.எனது முதலாவது மற்றும் இரண்டாவது மகள்கள் திருமணம் ஆகி அவர்கள் தனியாக உள்ளனர். தற்போதும் அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.எமது மார்க்கத்தின் படி ஐந்து வேளை நாங்கள் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு செல்வது குற்றமா, பள்ளியில் பழுதடைந்த மின்விசிறியை திருத்தி கொடுத்தது குற்றமா, ரத்ததானம் முன்னெடுத்தனர் ரத்தம் கொடுத்தேன் அது குற்றமா, சிரமதானம் செய்தேன் அது தப்பா, இதற்காகவா என்னை மூன்று வருடம் சிறையில் அடைத்தீர்கள் இதுதான் நான் கேட்டேன்.இன்டர்போல் தொடக்கம் என்னை விசாரணை செய்தனர் சஹ்ரானுக்கு அடுத்தது நான் தான் என சித்தரிக்கப்பட்டேன் என தனது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement