• Oct 01 2023

ஜனாதிபதி தேர்தல் - சஜித் ஒழிவதற்கு காடு ஒன்றை தேடும் ஜக்கிய தேசிய கட்சி..! samugammedia

Chithra / May 23rd 2023, 6:23 pm
image

Advertisement

அடுத்த வருடம் ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்றால் சஜித் பிரேமதாச கொங்கோ காட்டில் ஒழிந்து கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பிரேமதாச யால காட்டில் பதுங்கியிருந்ததாக தெரிவித்த ரங்கே பண்டார, இம்முறை யால காடு அவருக்கு மறைவாக அமையாது எனவும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், அவர் மறைந்திருக்கக் கூடிய காடு ஒன்றை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


ஜனாதிபதி தேர்தல் - சஜித் ஒழிவதற்கு காடு ஒன்றை தேடும் ஜக்கிய தேசிய கட்சி. samugammedia அடுத்த வருடம் ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்றால் சஜித் பிரேமதாச கொங்கோ காட்டில் ஒழிந்து கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார விமர்சனம் செய்துள்ளார்.கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பிரேமதாச யால காட்டில் பதுங்கியிருந்ததாக தெரிவித்த ரங்கே பண்டார, இம்முறை யால காடு அவருக்கு மறைவாக அமையாது எனவும் தெரிவித்தார்.சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், அவர் மறைந்திருக்கக் கூடிய காடு ஒன்றை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ரங்கே பண்டார தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement