• Sep 20 2024

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன்...!சுகாஸ் ருவிட்....! samugammedia

Sharmi / Oct 31st 2023, 9:06 pm
image

Advertisement

பாசிசவாதிகள் என்று சித்திரிப்பவர்களுக்கும் எம்மண்ணில் இடமில்லை என்ற மிகத் தெளிவான செய்தியை வழங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சர்சைக்குரிய சட்டத்தரணியொருவரது கருத்தரங்கானது யாழ் பல்கலையில் இன்று நடைபெறவிருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டிலேயே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியில் அந் நிகழ்வு நிறுத்தப்பட்டது.

அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.

இவரது இந்த கருத்து பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே  இன்றைய கருத்தரங்குக்கு மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த  கருத்தரங்கு நிறுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

எம்மவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கும் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகள் - பாசிசவாதிகள் என்று சித்திரிப்பவர்களுக்கும் எம்மண்ணில் இடமில்லை என்ற மிகத் தெளிவான செய்தியை வழங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் என பதிவிட்டுள்ளார்.





யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன்.சுகாஸ் ருவிட். samugammedia பாசிசவாதிகள் என்று சித்திரிப்பவர்களுக்கும் எம்மண்ணில் இடமில்லை என்ற மிகத் தெளிவான செய்தியை வழங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.சர்சைக்குரிய சட்டத்தரணியொருவரது கருத்தரங்கானது யாழ் பல்கலையில் இன்று நடைபெறவிருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டிலேயே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியில் அந் நிகழ்வு நிறுத்தப்பட்டது.அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.இவரது இந்த கருத்து பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.இவ்வாறானதொரு பின்னணியிலேயே  இன்றைய கருத்தரங்குக்கு மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.இந்நிலையில், குறித்த  கருத்தரங்கு நிறுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,எம்மவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கும் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகள் - பாசிசவாதிகள் என்று சித்திரிப்பவர்களுக்கும் எம்மண்ணில் இடமில்லை என்ற மிகத் தெளிவான செய்தியை வழங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement