• Nov 26 2024

அரகலயவின் போது கோட்டாபய அடித்துக் கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் அவரை காப்பாற்றினேன் - மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பகிரங்கம்

Chithra / May 12th 2024, 2:48 pm
image



அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின் போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேறு பல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை.

உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை.

நான் எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது.

கொழும்பு அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.

இதேவேளை 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் துப்பாக்கி குண்டுகளும் இன்றும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரகலயவின் போது கோட்டாபய அடித்துக் கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் அவரை காப்பாற்றினேன் - மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பகிரங்கம் அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின் போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.வேறு பல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை.உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை.நான் எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது.கொழும்பு அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.இதேவேளை 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் துப்பாக்கி குண்டுகளும் இன்றும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement