• May 20 2024

சமயத்தை தாண்டி சமூகப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் - புதிய பேராயர் தெரிவிப்பு!

Tamil nila / Jan 4th 2023, 9:36 pm
image

Advertisement

இறை பணியாற்ற இறைவனால் அனுப்பப்பட்ட கருவிகளில் ஒருவனாக சமயத்தையும் தாண்டி சமுதாயப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் என தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் தெரிவித்தார்.


புதிய பேராயராகப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை யாழ். வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றபபோதே நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர், மேலும் தெரிவிக்கையில், இறைபணியாற்றுவதற்காக இறைவன் என்னை ஒரு கருவியாக அனுப்பியுள்ளார்.


என்ன இந்த பொறுப்புக்கு வருவதற்கு பிரார்த்தித்த அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.


எமது திருச்சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற வேண்டும்


நாம் நொந்து போன மக்கள் எம்முள் உடைவுகள் இருக்கலாம் அவற்றையெல்லாம் மறந்து ஒற்றுமையாக தோளோடு தோல் நின்று இறை பணியாற்ற முன்வருவதோடு அதனையும் தாண்டி சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



இந் நிகழ்வில், பேராயர்கள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நல்லை ஆதீனம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சமயத்தை தாண்டி சமூகப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் - புதிய பேராயர் தெரிவிப்பு இறை பணியாற்ற இறைவனால் அனுப்பப்பட்ட கருவிகளில் ஒருவனாக சமயத்தையும் தாண்டி சமுதாயப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் என தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் தெரிவித்தார்.புதிய பேராயராகப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை யாழ். வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றபபோதே நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர், மேலும் தெரிவிக்கையில், இறைபணியாற்றுவதற்காக இறைவன் என்னை ஒரு கருவியாக அனுப்பியுள்ளார்.என்ன இந்த பொறுப்புக்கு வருவதற்கு பிரார்த்தித்த அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.எமது திருச்சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற வேண்டும்நாம் நொந்து போன மக்கள் எம்முள் உடைவுகள் இருக்கலாம் அவற்றையெல்லாம் மறந்து ஒற்றுமையாக தோளோடு தோல் நின்று இறை பணியாற்ற முன்வருவதோடு அதனையும் தாண்டி சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.இந் நிகழ்வில், பேராயர்கள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நல்லை ஆதீனம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement