• Apr 27 2024

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதை மறக்க மாட்டேன்:டென்னிஸ் வீரர் நோவாக் கருத்து!

Sharmi / Dec 31st 2022, 5:50 am
image

Advertisement

2022ம் ஆண்டின் தொடக்கத்தின் போது கொரோனா தடுப்பூசி செலுத்தாத விவகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், ஓராண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கலந்து கொள்ளும் வகையில், கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசாங்கம் (தொழிற்கட்சி) அவருக்கு விசா வழங்கியது. இதன் மூலம் முந்தைய அரசாங்கம் (தாராளவாத தேசிய கூட்டணி) ஜோகோவிச் விசா பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ள ஜோகோவிச், முன்னதாக வரும் ஜனவரி 1 தொடங்கும் Adelaide International டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிருக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்கிறார். 


இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதை மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ள ஜோகோவிச், ஆனால் அதை கடந்து செல்வதற்கான நேரமிது எனத் தெரிவித்துள்ளார்.


ஜோகோவிச்சின் மீண்டும் வந்ததை உள்ளூர் வரவேற்பார்கள் எனக் கூறியுள்ளார் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகியான கிரேக் டைலே. இதுவரை எந்த விரோதத்தையும் ஆஸ்திரேலியாவில் உணரவில்லை எனக் கூறியிருக்கிறார் செர்பிய டென்னிஸ் வீரரும்  ஒன்பது முறை ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச். 


கடந்த ஜனவரி மாதம், ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட போது அவர் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதை மறக்க மாட்டேன்:டென்னிஸ் வீரர் நோவாக் கருத்து 2022ம் ஆண்டின் தொடக்கத்தின் போது கொரோனா தடுப்பூசி செலுத்தாத விவகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், ஓராண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கலந்து கொள்ளும் வகையில், கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசாங்கம் (தொழிற்கட்சி) அவருக்கு விசா வழங்கியது. இதன் மூலம் முந்தைய அரசாங்கம் (தாராளவாத தேசிய கூட்டணி) ஜோகோவிச் விசா பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ள ஜோகோவிச், முன்னதாக வரும் ஜனவரி 1 தொடங்கும் Adelaide International டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிருக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதை மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ள ஜோகோவிச், ஆனால் அதை கடந்து செல்வதற்கான நேரமிது எனத் தெரிவித்துள்ளார்.ஜோகோவிச்சின் மீண்டும் வந்ததை உள்ளூர் வரவேற்பார்கள் எனக் கூறியுள்ளார் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகியான கிரேக் டைலே. இதுவரை எந்த விரோதத்தையும் ஆஸ்திரேலியாவில் உணரவில்லை எனக் கூறியிருக்கிறார் செர்பிய டென்னிஸ் வீரரும்  ஒன்பது முறை ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச். கடந்த ஜனவரி மாதம், ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட போது அவர் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement