• May 07 2024

ஓட்டங்கள் இன்றி 7 விக்கெட்டுகள்- புதிய உலக சாதனை படைத்த இந்தோனேஷிய வீராங்கனை..!!

Tamil nila / Apr 26th 2024, 8:12 pm
image

Advertisement

இந்தோனேஷிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 17 வயது ரொஹ்மாலியா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது மங்கோலியா மற்றும் இந்தோனேஷியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி, உதயன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேஷிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 152 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மங்கோலிய அணி இந்தோனேஷிய அணி வீரங்கனை ரொஹ்மாலியா வீசிய அபார பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

மேலும் இந்தப் போட்டியில் ரொஹ்மாலியா 3.2 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன் நெதர்லாந்து அணியின் ஃபிரடெரிக் ஓவர்டிக் மற்றும் அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஓட்டங்கள் இன்றி 7 விக்கெட்டுகள்- புதிய உலக சாதனை படைத்த இந்தோனேஷிய வீராங்கனை. இந்தோனேஷிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 17 வயது ரொஹ்மாலியா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது மங்கோலியா மற்றும் இந்தோனேஷியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி, உதயன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேஷிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.தொடர்ந்து 152 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மங்கோலிய அணி இந்தோனேஷிய அணி வீரங்கனை ரொஹ்மாலியா வீசிய அபார பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.மேலும் இந்தப் போட்டியில் ரொஹ்மாலியா 3.2 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இதற்கு முன் நெதர்லாந்து அணியின் ஃபிரடெரிக் ஓவர்டிக் மற்றும் அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement