• May 07 2024

வடக்கு கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளின் அதிபர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றது - ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு..!!

Tamil nila / Apr 26th 2024, 10:45 pm
image

Advertisement

வடக்கு கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளின்  அதிபர் நியமனம் சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாண மத்திய கல்லுரியில் பொது சேவை ஆணைக்குழுவால்  நியமிக்கப்பட்ட அதிபரை விடுத்து வேறொரு அதிபர் போடப்படுள்ளார். 

இது போலவே கிழக்கு மாகாண ஒரு பாடசாலையிலும் நடந்துள்ளது. இவ்விடயத்தில் பிள்ளையான் தலையிட்டு இதனை செய்துள்ளார். சரியான முறையில் அதிபர் நியமனம் இடம்பெற்ற போதும் கூட, இதை வடகிழக்கு அரசியல் வாதிகள் எவ்வாறு மாற்றினார்கள்? இந்த விடயத்தை நிறுத்த சொல்லி நாங்கள் கல்வி அமைச்சுக்கு சொல்லி இருக்கிறோம். 

எவ்வாறு செய்யபடுவதன் காரணம் என்ன? வருகின்ற தேர்தலில் இவர்களின் ஆதரவை பெறுவதற்காகவே எவ்வாறு செய்கிறார்கள். நாங்கள் வலியுறுத்தி திருத்த சொல்லியும் கல்வியமைச்சு இதுவரை திருத்தவில்லை. அது மட்டுமல்லாமல் இடம்மாற்றம் சம்பந்தமாகவும் அரசியல்வாதிகள் இதில் கைபோட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் 2 வழக்குகள் நடந்து கொண்டு இருக்கிறது. 

3 வது வழக்கு நடக்க இருக்கிறது. ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் சொல்லி இருக்கின்றோம். இந்த அரசியல்வாதிகளின்  செயற்பாடுகளை நிறுத்த சொல்லி வலியுறுத்தி இருக்கின்றோம். 

இடமாற்றம், பதவியுயர்வு  தொடர்பாக வடமாகாணத்தில் ஆசிரியருக்கு எதிராக வடமாகாணத்தில் நடக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஆசிரியருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். 

வருகின்ற மே மாதம் 1ம் திகதி  யாழ்ப்பாணத்தில் ஆசிரியர், அதிபருக்கு எதிராக நடக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆசிரியர் சங்கம் சார்பாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். எனவே ஆசிரியர் சங்கம் சார்பாக இப் போராட்டம் வெற்றி பெற  அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம் - என்றார்.  

வடக்கு கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளின் அதிபர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றது - ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு. வடக்கு கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளின்  அதிபர் நியமனம் சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,யாழ்ப்பாண மத்திய கல்லுரியில் பொது சேவை ஆணைக்குழுவால்  நியமிக்கப்பட்ட அதிபரை விடுத்து வேறொரு அதிபர் போடப்படுள்ளார். இது போலவே கிழக்கு மாகாண ஒரு பாடசாலையிலும் நடந்துள்ளது. இவ்விடயத்தில் பிள்ளையான் தலையிட்டு இதனை செய்துள்ளார். சரியான முறையில் அதிபர் நியமனம் இடம்பெற்ற போதும் கூட, இதை வடகிழக்கு அரசியல் வாதிகள் எவ்வாறு மாற்றினார்கள் இந்த விடயத்தை நிறுத்த சொல்லி நாங்கள் கல்வி அமைச்சுக்கு சொல்லி இருக்கிறோம். எவ்வாறு செய்யபடுவதன் காரணம் என்ன வருகின்ற தேர்தலில் இவர்களின் ஆதரவை பெறுவதற்காகவே எவ்வாறு செய்கிறார்கள். நாங்கள் வலியுறுத்தி திருத்த சொல்லியும் கல்வியமைச்சு இதுவரை திருத்தவில்லை. அது மட்டுமல்லாமல் இடம்மாற்றம் சம்பந்தமாகவும் அரசியல்வாதிகள் இதில் கைபோட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் 2 வழக்குகள் நடந்து கொண்டு இருக்கிறது. 3 வது வழக்கு நடக்க இருக்கிறது. ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் சொல்லி இருக்கின்றோம். இந்த அரசியல்வாதிகளின்  செயற்பாடுகளை நிறுத்த சொல்லி வலியுறுத்தி இருக்கின்றோம். இடமாற்றம், பதவியுயர்வு  தொடர்பாக வடமாகாணத்தில் ஆசிரியருக்கு எதிராக வடமாகாணத்தில் நடக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஆசிரியருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். வருகின்ற மே மாதம் 1ம் திகதி  யாழ்ப்பாணத்தில் ஆசிரியர், அதிபருக்கு எதிராக நடக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆசிரியர் சங்கம் சார்பாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். எனவே ஆசிரியர் சங்கம் சார்பாக இப் போராட்டம் வெற்றி பெற  அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம் - என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement