• Sep 29 2024

ஆதாரங்களுடன் நிரூபித்தால் பதவி விலகுவேன்..! சவால் விடும் அமைச்சர் ஹரின்

Chithra / Jun 24th 2024, 4:03 pm
image

Advertisement

தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் அமெரிக்காவில் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதன் காரணமாகவே, அவர்களால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 

இவ்வாறான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவை உண்மை என்றால், அவற்றை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் நான் பதவி விலகுவேன் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

”எங்கள் குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே எங்கோ சென்றுவிட்டு தான், மறுநாள் காலையில் அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்றதாக எங்கள் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுவதை நான் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் நிரூபிக்கலாம். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது எமது வீரர்கள் நைட் கிளப்பில் அல்லது பார்ட்டியில் இருந்தார்கள் என்று யாராவது நிரூபித்தால், நான் பதவி விலகுவேன். ஒரு நாடாக, நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். ஒரு ஜில் பால் கூட அடிக்காதவர்கள் சமூக வலைதளங்களில் பேசுவது சரியா என்று தெரியவில்லை”

ஆதாரங்களுடன் நிரூபித்தால் பதவி விலகுவேன். சவால் விடும் அமைச்சர் ஹரின் தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் அமெரிக்காவில் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதன் காரணமாகவே, அவர்களால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவை உண்மை என்றால், அவற்றை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் நான் பதவி விலகுவேன் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.”எங்கள் குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே எங்கோ சென்றுவிட்டு தான், மறுநாள் காலையில் அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்றதாக எங்கள் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுவதை நான் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் நிரூபிக்கலாம். இந்த சுற்றுப்பயணத்தின் போது எமது வீரர்கள் நைட் கிளப்பில் அல்லது பார்ட்டியில் இருந்தார்கள் என்று யாராவது நிரூபித்தால், நான் பதவி விலகுவேன். ஒரு நாடாக, நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். ஒரு ஜில் பால் கூட அடிக்காதவர்கள் சமூக வலைதளங்களில் பேசுவது சரியா என்று தெரியவில்லை”

Advertisement

Advertisement

Advertisement