• May 20 2024

ராஜிதவுக்கு வழங்கினால் ரோஹிதவுக்கும் வழங்க வேண்டும்! இல்லையேல் அது பாரிய அநீதி! அடம்பிடிக்கும் மொட்டு samugammedia

Chithra / Apr 17th 2023, 11:09 am
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரோஹிதவுக்கு இன்றி ராஜிதவுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும், இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின. 

இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜிதவுக்கு வழங்கினால் ரோஹிதவுக்கும் வழங்க வேண்டும் இல்லையேல் அது பாரிய அநீதி அடம்பிடிக்கும் மொட்டு samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.ரோஹிதவுக்கு இன்றி ராஜிதவுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும், இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின. இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement