• Nov 23 2024

தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபட்டால் அதற்கு ஒருவரே காரணம்- யாழில் விக்னேஸ்வரன் எம்.பி பகீர்..!

Sharmi / Aug 29th 2024, 11:15 am
image

தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபட உள்ளதாக நானும் அறிந்த நிலையில் அவ்வாறு பிளவுபடுமானால் அதற்கு ஒருவரே காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,  ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சி பிளவுபட்டு மாற்று அணி ஒன்று உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியமை உண்மையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றாகவே பயணித்து வருகின்றன. 

சில வேளைகளில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு வருகிறோம். 

தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதுவரையும் வழங்கவில்லை.

அவர்கள் முதலில் சஜித் பிரேமதாசவை ஆதரவு வழங்குவார்கள் என பேசப்பட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பவர்கள் போல் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது தமிழரசு கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில், தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபடுத்த ஒருவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழரசு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நபரே, என்னையும் தமிழரசு கட்சியையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்.

ஆகவே, அரசியலில் எதுவும் நடக்கலாம் இருந்து பார்ப்போம் தமிழரசு கட்சியில் என்ன நடக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபட்டால் அதற்கு ஒருவரே காரணம்- யாழில் விக்னேஸ்வரன் எம்.பி பகீர். தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபட உள்ளதாக நானும் அறிந்த நிலையில் அவ்வாறு பிளவுபடுமானால் அதற்கு ஒருவரே காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,  ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சி பிளவுபட்டு மாற்று அணி ஒன்று உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியமை உண்மையா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றாகவே பயணித்து வருகின்றன. சில வேளைகளில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு வருகிறோம். தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதுவரையும் வழங்கவில்லை.அவர்கள் முதலில் சஜித் பிரேமதாசவை ஆதரவு வழங்குவார்கள் என பேசப்பட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பவர்கள் போல் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.தற்போது தமிழரசு கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில், தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபடுத்த ஒருவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.தமிழரசு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நபரே, என்னையும் தமிழரசு கட்சியையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்.ஆகவே, அரசியலில் எதுவும் நடக்கலாம் இருந்து பார்ப்போம் தமிழரசு கட்சியில் என்ன நடக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement