• Oct 19 2024

தேர்தலை தள்ளி வைத்தால் வாங்கி கட்டிக்க நேரிடும்..! எச்சரிக்கும் மொட்டு எம்.பி. samugammedia

Chithra / Jun 6th 2023, 2:37 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் மக்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது தான் என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று (06) தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த உறுப்பினர், இந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இல்லையேல், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் பலனில்லை.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், காட்டுச் சட்டத்தை அகற்றுவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதி நியமிக்கப்பட்டதாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.


தேர்தலை தள்ளி வைத்தால் வாங்கி கட்டிக்க நேரிடும். எச்சரிக்கும் மொட்டு எம்.பி. samugammedia உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் மக்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது தான் என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று (06) தெரிவித்தார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த உறுப்பினர், இந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.இல்லையேல், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் பலனில்லை.ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், காட்டுச் சட்டத்தை அகற்றுவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதி நியமிக்கப்பட்டதாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement