• Feb 01 2025

சரியான திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதி மாளிகையை தருகிறேன்! யாழில் ஜனாதிபதி

Chithra / Feb 1st 2025, 8:00 am
image


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தும் சரியான ஒரு திட்டத்தை முன் வையுங்கள் அதனை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தெரிவித்தார். 

நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை எனக்கு வேண்டாம், இது இங்குள்ள மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் அல்லது சுற்றுலா துறையோ சரியான திட்டம் ஒன்றை முன் வையுங்கள் அதனை உங்களுக்கு தந்து விடுகிறேன். 

கடந்த ஆட்சி காலத்தில் குறித்த மாளிகையை தனியார் நிறுவனம் ஒன்று தமக்குத் தருமாறு கோரிக்கை முன் வைத்துள்ளது.

எனினும் அவர்களுக்கு அது உத்தியோபூர்வமாக கையளிக்கப்படாத நிலையில் சரியான திட்டத்தை முன் வையுங்கள் அதனை உங்களுக்கு தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


சரியான திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதி மாளிகையை தருகிறேன் யாழில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தும் சரியான ஒரு திட்டத்தை முன் வையுங்கள் அதனை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை எனக்கு வேண்டாம், இது இங்குள்ள மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் அல்லது சுற்றுலா துறையோ சரியான திட்டம் ஒன்றை முன் வையுங்கள் அதனை உங்களுக்கு தந்து விடுகிறேன். கடந்த ஆட்சி காலத்தில் குறித்த மாளிகையை தனியார் நிறுவனம் ஒன்று தமக்குத் தருமாறு கோரிக்கை முன் வைத்துள்ளது.எனினும் அவர்களுக்கு அது உத்தியோபூர்வமாக கையளிக்கப்படாத நிலையில் சரியான திட்டத்தை முன் வையுங்கள் அதனை உங்களுக்கு தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement