ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி அநுர குமாரவின் கையில் மந்திரக்கோல்தான் இருக்க வேண்டும் என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் தனது நிலைப்பாடு தொடர்பாக அவர் இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றது. அதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்றத்தில் இருப்போரும் வெளியில் இருக்கும் அவர்கள் கட்சிக்காரர்களும் புலம்பிக்கொண்டிருப்பது நியாயமற்றதாகும்.
ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி அநுர குமாரவின் கையில் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.
இந்த அரசின் தேர்தல் வாக்குறுதிகள் எங்கே என கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்தால் அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மலைபோல் உள்ள நிலையில் அவர்கள் கேள்வி கேட்பது பொருத்தமற்றது.
அதே போல் ரிசாத் பதியுதீன் கட்சியினரும் இருபது வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்தும் சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை.
ஆகவே இந்த அரசாங்கத்துக்கு ஆக குறைந்தது ஒரு வருடமாவது நாம் சந்தர்ப்பத்தை கொடுத்து, விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு முன் விழுந்தடித்துக்கொண்டு அரசை குழப்ப முன்வருவதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என்றார்.
இரு மாதங்களுக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அநுர கையில் மந்திரக்கோல்தான் இருக்க வேண்டும் முபாறக் அப்துல் மஜீத் ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி அநுர குமாரவின் கையில் மந்திரக்கோல்தான் இருக்க வேண்டும் என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் தனது நிலைப்பாடு தொடர்பாக அவர் இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றது. அதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்றத்தில் இருப்போரும் வெளியில் இருக்கும் அவர்கள் கட்சிக்காரர்களும் புலம்பிக்கொண்டிருப்பது நியாயமற்றதாகும்.ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி அநுர குமாரவின் கையில் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.கோட்டாபய என்ற முட்டாள் பயலால் நாசமாக்கப்பட்ட நாட்டை ரணில் விக்ரமசிங்க ஓரளவு நிமிர்த்தினர். தனது இரண்டு வருட ஆட்சிக்காலத்தில் அவரால் முழுமையாக நாட்டை நிமிர்த்த முடியவில்லை என்பதைத்தான் அவரை மக்கள் தோற்கடித்ததன் மூலம் தெரிகிறது.இந்த அரசின் தேர்தல் வாக்குறுதிகள் எங்கே என கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்தால் அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மலைபோல் உள்ள நிலையில் அவர்கள் கேள்வி கேட்பது பொருத்தமற்றது. முப்பது வருடங்களாக பாராளுமன்றில் இருக்கும் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியினரும் சமூகத்திற்கு கொடுக்காத வாக்குறுதிகளா அதெல்லாம் அப்படித்தான், சும்மா நாங்களும் தேர்தல் காலத்தில் சொல்வோம், அதுவல்லாம் நடக்காது என்று தன் வாக்குறுதியை ஹக்கீமே கொச்சைப்படுத்தி ஜோக்கடித்ததை கண்டுள்ளோம்.அதே போல் ரிசாத் பதியுதீன் கட்சியினரும் இருபது வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்தும் சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை.ஆகவே இந்த அரசாங்கத்துக்கு ஆக குறைந்தது ஒரு வருடமாவது நாம் சந்தர்ப்பத்தை கொடுத்து, விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு முன் விழுந்தடித்துக்கொண்டு அரசை குழப்ப முன்வருவதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என்றார்.