• May 03 2024

ஹட்டனில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு...!

Sharmi / Apr 3rd 2024, 3:01 pm
image

Advertisement

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்றையதினம்(02) இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பள்ளிகளுக்கு அபிவிருத்தி பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



ஹட்டனில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்றையதினம்(02) இடம்பெற்றது.வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பள்ளிகளுக்கு அபிவிருத்தி பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement