இலங்கை தமிழரசு கட்சியின் உட்கட்சி முரண்பாடு, தமிழர் தாயகத்திலுள்ள மக்களின் அரசியலில் முக்கியத்துவம பெற்றுள்ள நிலையில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கட்சியின் உத்தியோகபூர்வமான மத்திய குழுக் கூட்டமாக இது நடைபெறாது என உட்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியின் உட்கட்சி முரண்பாடு, உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அவசரமாக கிளிநொச்சியில் கூடும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு. இலங்கை தமிழரசு கட்சியின் உட்கட்சி முரண்பாடு, தமிழர் தாயகத்திலுள்ள மக்களின் அரசியலில் முக்கியத்துவம பெற்றுள்ள நிலையில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் கட்சியின் உத்தியோகபூர்வமான மத்திய குழுக் கூட்டமாக இது நடைபெறாது என உட்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியின் உட்கட்சி முரண்பாடு, உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.