• May 04 2024

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடு - மத்திய குழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

Chithra / Apr 23rd 2024, 7:39 am
image

Advertisement

 

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதானால் கட்சி உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடு - மத்திய குழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு  இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை இடம்பெறவிருந்தது.இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதானால் கட்சி உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement