• Nov 24 2024

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு- 9 பேர் கைது..!

Sharmi / Nov 23rd 2024, 2:17 pm
image

மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்கக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.



சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு- 9 பேர் கைது. மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்கக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனசந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement