• Apr 13 2025

அநுர ஜனாதிபதியான பின்னரும் மன்னாரில் தொடரும் சட்டவிரோத கனிய மணல் அகழ்வு!- எழுந்த குற்றச்சாட்டு

Chithra / Apr 8th 2025, 4:09 pm
image


அநுரகுமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானில் வசந் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மத்திய அரசாங்கமும்,ஜே.வி.பி கட்சியும் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் சூழ்ச்சியான சில நடவடிக்கைகளை அவர்கள் இத்தேர்தலில் முன்னெடுத்து வருகின்றனர்.

எம்மை கட்டுப்படுத்தி அதிகாரத்தை அதிகாரத்தை செலுத்துவதற்கான ஒரு சூழ்ச்சியை இத்தேர்தலில் பயன்படுத்துகின்றனர்.

நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போனஸ் ஆசனமாக ஒரு சிங்களவரை நியமித்துள்ளனர்.இத்தேர்தலில் வட்டாரங்களில் அவர்களினால் வெற்றி பெற முடியாது என்று நன்றாக தெரியும்.

தமக்கு கிடைக்கின்ற வாக்குகளை வைத்து போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்குடன் சிங்களவர்களை போனஸ் ஆசனத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற  நாசகார திட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை பயன்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

மன்னார் பிரதேச சபை பிரிவில் கணிய மணல் அகழ்வுக்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜே.வி.பி. அரசாங்கம் கூறுகிறது இயற்கைக்கு எதிராக எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என்று.

ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மன்னாரில் பல தடவைகள் கணிய மணல் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடன் இங்கு வருகை தந்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அநுர ஜனாதிபதியான பின்னரும் மன்னாரில் தொடரும் சட்டவிரோத கனிய மணல் அகழ்வு- எழுந்த குற்றச்சாட்டு அநுரகுமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானில் வசந் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மத்திய அரசாங்கமும்,ஜே.வி.பி கட்சியும் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது.இந்த நிலையில் சூழ்ச்சியான சில நடவடிக்கைகளை அவர்கள் இத்தேர்தலில் முன்னெடுத்து வருகின்றனர்.எம்மை கட்டுப்படுத்தி அதிகாரத்தை அதிகாரத்தை செலுத்துவதற்கான ஒரு சூழ்ச்சியை இத்தேர்தலில் பயன்படுத்துகின்றனர்.நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போனஸ் ஆசனமாக ஒரு சிங்களவரை நியமித்துள்ளனர்.இத்தேர்தலில் வட்டாரங்களில் அவர்களினால் வெற்றி பெற முடியாது என்று நன்றாக தெரியும்.தமக்கு கிடைக்கின்ற வாக்குகளை வைத்து போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்குடன் சிங்களவர்களை போனஸ் ஆசனத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற  நாசகார திட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை பயன்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.மன்னார் பிரதேச சபை பிரிவில் கணிய மணல் அகழ்வுக்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜே.வி.பி. அரசாங்கம் கூறுகிறது இயற்கைக்கு எதிராக எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என்று.ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மன்னாரில் பல தடவைகள் கணிய மணல் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடன் இங்கு வருகை தந்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement