நுவரெலியா, அம்பேவல – பட்டிப்பொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ,முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது, மாணிக்கக்கற்களை அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அம்பேவல பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு ஐவர் கைது நுவரெலியா, அம்பேவல – பட்டிப்பொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று ,முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.இதன்போது, மாணிக்கக்கற்களை அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.