• Nov 10 2024

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

Sharmi / Sep 9th 2024, 2:43 pm
image

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றையதினம்(09) பொலிசார் சுற்றி வளைத்தனர்.

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

அதேவேளை, அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 2,040 லீட்டர் கோடாவினை அப்பகுதியில் வைத்து பொலிசார் அழித்துள்ளனர். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றையதினம்(09) பொலிசார் சுற்றி வளைத்தனர்.தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதேவேளை, அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 2,040 லீட்டர் கோடாவினை அப்பகுதியில் வைத்து பொலிசார் அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement