• Jan 21 2025

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் - வரிச் சலுகைகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு

IMF
Chithra / Jan 21st 2025, 12:38 pm
image


சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டு, சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

வருமானத்திற்கு செலுத்தப்படும் வரியை 150,000 ரூபாயாக அதிகரிப்பது, VAT இல் இருந்து பால் பொருட்களுக்கு விலக்கு மற்றும் பாடசாலை எழுதுபொருட்கள் வாங்குவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் - வரிச் சலுகைகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டு, சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.வருமானத்திற்கு செலுத்தப்படும் வரியை 150,000 ரூபாயாக அதிகரிப்பது, VAT இல் இருந்து பால் பொருட்களுக்கு விலக்கு மற்றும் பாடசாலை எழுதுபொருட்கள் வாங்குவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement