• May 08 2024

ஐ.எம்.எஃபின் அங்கிகாரம் 20ஆம் திகதி கிடைக்கப்பெறும் : நம்பிக்கையில் இலங்கை! SamugamMedia

Tamil nila / Mar 16th 2023, 8:15 pm
image

Advertisement

சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி இலங்கைக்கு கிடைத்ததும் அடுத்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு7 பில்லியன் டொலர் கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், அடுத்த நான்கு வருடங்களில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏழு மில்லியன் டொலர் என்பது நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிதியமைப்புகள் மற்றும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்கப்போகின்றது என தெரிவித்துள்ள அவர்,  அதிகளவு முதலீடுகளிற்கான வாய்ப்புகளை பார்க்கின்றோம்; எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள பலர் வாய்ப்புகளிற்காக காத்திருப்பதை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் 20 ம் திகதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

நாங்கள் நிதிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும்,நாங்கள் மிகவும் கடினமான காலங்கை கடந்துள்ளோம்,ஆனால் 2023 கூட எங்களிற்கு முக்கியமானது ஏனென்றால் இந்த ஆண்டு மீட்சியை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.எம்.எஃபின் அங்கிகாரம் 20ஆம் திகதி கிடைக்கப்பெறும் : நம்பிக்கையில் இலங்கை SamugamMedia சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி இலங்கைக்கு கிடைத்ததும் அடுத்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு7 பில்லியன் டொலர் கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், அடுத்த நான்கு வருடங்களில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த ஏழு மில்லியன் டொலர் என்பது நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிதியமைப்புகள் மற்றும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்கப்போகின்றது என தெரிவித்துள்ள அவர்,  அதிகளவு முதலீடுகளிற்கான வாய்ப்புகளை பார்க்கின்றோம்; எனவும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள பலர் வாய்ப்புகளிற்காக காத்திருப்பதை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் 20 ம் திகதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாங்கள் நிதிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும்,நாங்கள் மிகவும் கடினமான காலங்கை கடந்துள்ளோம்,ஆனால் 2023 கூட எங்களிற்கு முக்கியமானது ஏனென்றால் இந்த ஆண்டு மீட்சியை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement