கல்விசார பணியாளர்களின் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்க- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்..!samugammedia
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் எதிர் வருகின்ற 28.02.2024 மற்றும் 29.02.2024 அதாவது நாளை மற்றும் நாளை மறுதினமும் தொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்ததை முன்னெடுக்கவுள்ளன.
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் சிக்கல்களிற்கு உரிய கால அவகாசம் ஊழியர் சங்கங்களினால் வழங்கப்பட்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் சிறிலங்கா அரசாங்கமும் இதுவரை தீர்வு வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடித் தீர்வினை வழங்கவேண்டி நாடு தழுவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், இடம்பெறும் குறித்த வேலைநிறுத்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எதிர்வரும் பெப்ரவரி 28 மற்றும் 29, 2024 ஆம் திகதிகளில் ஈடுபடவுள்ள நிலையில், ஊழியர் சங்கம் முன்னெடுக்கும் இருநாள் வேலைநிறுத்தத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது விரிவுரைகளினைத் தவிர்த்து முழுமையான ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால் மாணவர்களின் கல்வியாண்டுகள் நிர்ணயித்தவற்றைவிட காலத்தால் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும், காலதாமதம் ஏதுமின்றி கல்விசார ஊழியர்களைப் பாதிக்கும் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நியாயமான சிக்கல்களிற்கு விரைந்து தீர்வுகான உரிய தரப்புக்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கல்விசார பணியாளர்களின் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்க- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்.samugammedia நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் எதிர் வருகின்ற 28.02.2024 மற்றும் 29.02.2024 அதாவது நாளை மற்றும் நாளை மறுதினமும் தொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்ததை முன்னெடுக்கவுள்ளன.பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் சிக்கல்களிற்கு உரிய கால அவகாசம் ஊழியர் சங்கங்களினால் வழங்கப்பட்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் சிறிலங்கா அரசாங்கமும் இதுவரை தீர்வு வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடித் தீர்வினை வழங்கவேண்டி நாடு தழுவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், இடம்பெறும் குறித்த வேலைநிறுத்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எதிர்வரும் பெப்ரவரி 28 மற்றும் 29, 2024 ஆம் திகதிகளில் ஈடுபடவுள்ள நிலையில், ஊழியர் சங்கம் முன்னெடுக்கும் இருநாள் வேலைநிறுத்தத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது விரிவுரைகளினைத் தவிர்த்து முழுமையான ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால் மாணவர்களின் கல்வியாண்டுகள் நிர்ணயித்தவற்றைவிட காலத்தால் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும், காலதாமதம் ஏதுமின்றி கல்விசார ஊழியர்களைப் பாதிக்கும் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நியாயமான சிக்கல்களிற்கு விரைந்து தீர்வுகான உரிய தரப்புக்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.