• Nov 28 2025

சீரற்ற வானிலையால் கொழும்பிலும் பாதிப்பு - சில வீதிகள் மூடல்

Chithra / Nov 28th 2025, 12:37 pm
image


கொழும்பில் சீரற்ற வானிலையால் பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனவே, குறித்த வீதிகளுக்கு பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அந்தவகையில், தற்போது தடைசெய்யப்பட்டுள்ள வீதிகளாக,


பிரேமசிறி கேமதாச மாவத்தையில் உள்ள லயனல் தியேட்டர் அருகே மற்றும் கெப்பட்டிபொல மாவத்தை, தேசிய வைத்தியசாலையில் 4வது நுழைவாயில் அருகில், எல்விடிகல மாவத்தை, குயின் வீதி சந்தி , கொட்டாஞ்சேனை கோவிலுக்கு அருகிலுள்ள ஆமர் பார்பர் சந்தி என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் கொழும்பிலும் பாதிப்பு - சில வீதிகள் மூடல் கொழும்பில் சீரற்ற வானிலையால் பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, குறித்த வீதிகளுக்கு பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில், தற்போது தடைசெய்யப்பட்டுள்ள வீதிகளாக,பிரேமசிறி கேமதாச மாவத்தையில் உள்ள லயனல் தியேட்டர் அருகே மற்றும் கெப்பட்டிபொல மாவத்தை, தேசிய வைத்தியசாலையில் 4வது நுழைவாயில் அருகில், எல்விடிகல மாவத்தை, குயின் வீதி சந்தி , கொட்டாஞ்சேனை கோவிலுக்கு அருகிலுள்ள ஆமர் பார்பர் சந்தி என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement