சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட 142 குடும்பங்களில் உள்ள 506 பேர் பாதுகாப்பான 17 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவும் ஆபத்தான காலநிலை சூழ்நிலை காரணமாக, மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை - நுவரெலியாவில் 6 பேர் பலி - 4 பேர் மாயம் - 268 குடும்பங்கள் பாதிப்பு சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, பாதிக்கப்பட்ட 142 குடும்பங்களில் உள்ள 506 பேர் பாதுகாப்பான 17 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.மேலும், தற்போது நிலவும் ஆபத்தான காலநிலை சூழ்நிலை காரணமாக, மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.