சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27 ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 பேரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பலத்த காற்றினால் விழுந்த மரங்களை அகற்றுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் சிறிய படகுகள் மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்த ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் மேலதிக அனர்த்த நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை களத்தில் இறங்கிய கடற்படையினர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27 ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 பேரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கூடுதலாக, பலத்த காற்றினால் விழுந்த மரங்களை அகற்றுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் சிறிய படகுகள் மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்த ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் மேலதிக அனர்த்த நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.