• Nov 28 2025

திக்கம் நாச்சிமார் கோவிலடி வெள்ள வாய்க்கால் அடைப்பு பணிகள் தீவிரம்!

shanuja / Nov 28th 2025, 12:40 pm
image

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின்  வெள்ள வாய்க்கால்  அடைப்புப் பணிகள் தீவரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


குறித்த வாய்க்கால் மழை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால்  வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்த நிலையில்  பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன கொட்டும் மழையிலும் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடங்கலான குழுவினர் தற்போது கொட்டும் மழையிலும் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவய்க்கால் காணப்படுகிறது

திக்கம் நாச்சிமார் கோவிலடி வெள்ள வாய்க்கால் அடைப்பு பணிகள் தீவிரம் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின்  வெள்ள வாய்க்கால்  அடைப்புப் பணிகள் தீவரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வாய்க்கால் மழை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால்  வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்த நிலையில்  பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன கொட்டும் மழையிலும் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடங்கலான குழுவினர் தற்போது கொட்டும் மழையிலும் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவய்க்கால் காணப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement