• Nov 28 2024

வற் வரி அதிகரிப்பின் தாக்கம்..! பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு..!

Bus
Chithra / Dec 30th 2023, 9:54 am
image

 

 

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 18 வீத வற் வரி அதிகரிப்பின் காரணமாக அனைத்து பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

சுமார் 15 வீதத்தால் இவ்வாறு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.  

இதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருக்கும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இதற்கு பின்னர் 35 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

15 வீதமாக இருக்கும் வற் வரியை ஜனவரி முதல் 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த நிலையில் பேருந்து கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வற் வரி அதிகரிப்பின் தாக்கம். பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு.   எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 18 வீத வற் வரி அதிகரிப்பின் காரணமாக அனைத்து பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.சுமார் 15 வீதத்தால் இவ்வாறு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.  இதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருக்கும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இதற்கு பின்னர் 35 ரூபாவாக அதிகரிக்கப்படும்.15 வீதமாக இருக்கும் வற் வரியை ஜனவரி முதல் 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் பேருந்து கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement