• Apr 30 2024

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி..! நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

Chithra / Apr 15th 2024, 3:05 pm
image

Advertisement

நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு ஒதுக்கம் பேணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி. நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு ஒதுக்கம் பேணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement