• May 06 2025

மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஜூலை 15ஆம் திகதி வரவுள்ள முக்கிய அறிவிப்பு

Chithra / Jul 10th 2024, 9:23 am
image

 

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்பட்ட கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும். 

அதன்படி, குடும்பப் பிரிவினருக்கான கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைப்பும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி, ஹோட்டல் மற்றும் தொழில்துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஜூலை 15ஆம் திகதி வரவுள்ள முக்கிய அறிவிப்பு  மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.இந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்பட்ட கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும். அதன்படி, குடும்பப் பிரிவினருக்கான கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைப்பும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி, ஹோட்டல் மற்றும் தொழில்துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now