• May 04 2024

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் முக்கிய விவாதம்!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 3:02 pm
image

Advertisement

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இலங்கையின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க தலைமையில் இலங்கை தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தமது நாட்டுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி கருணாதிலகா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் முக்கிய விவாதம்SamugamMedia சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இலங்கையின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளது.மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க தலைமையில் இலங்கை தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.இலங்கை தொடர்பில் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இலங்கையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தமது நாட்டுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி கருணாதிலகா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement