• May 04 2024

யாழ் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட முக்கிய பொருள்...! குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடி ...!

Sharmi / Apr 6th 2024, 10:08 am
image

Advertisement

யாழ் செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம், யாழ் மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸாரார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் வைத்து இன்று(06)  18 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினையும்  பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு   தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம்  பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட முக்கிய பொருள். குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடி . யாழ் செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம், யாழ் மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸாரார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் வைத்து இன்று(06)  18 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினையும்  பொலிஸார் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு   தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம்  பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement