• Oct 30 2024

தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல்! samugammedia

Tamil nila / Apr 11th 2023, 3:41 pm
image

Advertisement

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி   நடவடிக்கைகளினையும்   தற்காலிகமாக இடைநிறுத்தி  ஒத்துழைப்பு வழங்குமாறு  கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

இதற்கமைய கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளினையும் 2023.04.11 ம் திகதி தொடக்கம் 2023.04.24 ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி  ஒத்துழைப்பு வழங்குமாறு  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக்  கொண்ட  இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்ற போதிலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல் samugammedia கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி   நடவடிக்கைகளினையும்   தற்காலிகமாக இடைநிறுத்தி  ஒத்துழைப்பு வழங்குமாறு  கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.இதற்கமைய கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளினையும் 2023.04.11 ம் திகதி தொடக்கம் 2023.04.24 ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி  ஒத்துழைப்பு வழங்குமாறு  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக்  கொண்ட  இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்ற போதிலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement