• Mar 31 2025

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர்!

Chithra / Aug 29th 2024, 9:11 am
image

 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் டுபாயில் கைது செய்யப்பட்ட  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டுபாயில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து விமானத்தின் ஊடாக பலத்த பாதுகாப்புடன்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

இவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் என்றும் கூறப்படுகின்றது.

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர்  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் டுபாயில் கைது செய்யப்பட்ட  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொலை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டுபாயில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து விமானத்தின் ஊடாக பலத்த பாதுகாப்புடன்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement