• May 17 2024

இலங்கையில் வெற்றிலை, பாக்கு, இனிப்புகளின் விலைகளில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / Apr 11th 2023, 3:38 pm
image

Advertisement

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் இலங்கை சந்தையில் இனிப்புகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் புத்தாண்டு காலம் நெருங்குகின்ற நிலையில் கைவிசேடம் மற்றும் சமய அனுட்டானங்கள் அதிகரிக்கவுள்ளதால் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற சீனி, தேங்காய் எண்ணெய், பச்சைப்பயறு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இனிப்பு பலகாரங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக மிட்டாய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தேன் முறுக்குக்கு பயன்படுத்தப்படும் அரிசி மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேன் முறுக்கின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்றிலை பாக்கு ஒன்றின் விலையும் 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது  உணவு சட்டத்தை மீறிய 3000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருந்து 1,660 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது

இலங்கையில் வெற்றிலை, பாக்கு, இனிப்புகளின் விலைகளில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம். samugammedia பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் இலங்கை சந்தையில் இனிப்புகளின் விலைகள் அதிகரித்துள்ளன.அத்துடன் புத்தாண்டு காலம் நெருங்குகின்ற நிலையில் கைவிசேடம் மற்றும் சமய அனுட்டானங்கள் அதிகரிக்கவுள்ளதால் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற சீனி, தேங்காய் எண்ணெய், பச்சைப்பயறு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இனிப்பு பலகாரங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக மிட்டாய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தேன் முறுக்குக்கு பயன்படுத்தப்படும் அரிசி மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேன் முறுக்கின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்றிலை பாக்கு ஒன்றின் விலையும் 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதேவேளை, பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது  உணவு சட்டத்தை மீறிய 3000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருந்து 1,660 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement