• Nov 19 2024

இலங்கையில் நாளையதினம் முற்றாக முடங்கும் முக்கிய சேவைகள் - வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Nov 13th 2024, 9:17 am
image

 

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம், சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய கடமைகளுக்காகத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நாளையதினம் முற்றாக முடங்கும் முக்கிய சேவைகள் - வெளியான முக்கிய அறிவிப்பு  நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாளைய தினம், சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய கடமைகளுக்காகத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement