• May 03 2024

கடலட்டை பண்ணை தொடர்பில், சட்டவிதிப்படி உரிய தீர்வு வழங்குங்கள் - அன்னராசா வேண்டுகோள்!

Tamil nila / Dec 31st 2022, 4:01 pm
image

Advertisement

கடலட்டை தொடர்பான பிரச்சினை ஏற்படுமென ஏற்கனவே நான் கூறியிருந்தேன் அது நேற்று இடம்பெற்றுள்ளது. நாங்கள் கடலட்டை பண்ணை வழங்குவதை மறுக்கவில்லை. முறையாக சட்டவிதிப்படி உரிய பயனாளிகளுக்கு வழங்குங்கள் என்பதே எமது நிலை. 


நேற்றைய, போராட்டமல்ல எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது மக்களுக்காக என்றும் தொடர்ந்து குரல் கொடுப்போம். கடலட்டை பண்ணை கடந்த மாதம் அனலை தீவுக்கு விஜயம் மேற் கொண்ட போது பருத்தித் தீவில் சட்டவிரோதமாக இருக்கும் பண்ணைகளை அகற்றுமாறு அனலைதீவு மக்கள் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை  வைத்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 


இது போல சட்ட விரோத பண்ணைகளை தான் நாங்கள் இயன்றளவு எதிர்க்கின்றோம். பருத்தித் தீவில் இன்றளவும் சட்டவிரோதப்பண்ணைகள் காணப்படுகின்றது. குறித்த பிரதேச சங்கங்கள் , பிரதேச செயலர் போன்றோர் சட்டவிரோதம் என கூறிய போதும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 


பருத்தித்தீவில் சட்டவிரோதமாக காணப்படும் 90 ஏக்கர் தொடர்பில் முறையான விளக்கமளிக்கப்பட வேண்டும் .இப்பிரச்சினைதொடர்ந்தும் தீர்க்கப்படாத தருணத்தில் தேசிய தைப்பெங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரும் வேளையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்யும் எண்ணமுள்ளதாகத் தெரிவித்தார்.

கடலட்டை பண்ணை தொடர்பில், சட்டவிதிப்படி உரிய தீர்வு வழங்குங்கள் - அன்னராசா வேண்டுகோள் கடலட்டை தொடர்பான பிரச்சினை ஏற்படுமென ஏற்கனவே நான் கூறியிருந்தேன் அது நேற்று இடம்பெற்றுள்ளது. நாங்கள் கடலட்டை பண்ணை வழங்குவதை மறுக்கவில்லை. முறையாக சட்டவிதிப்படி உரிய பயனாளிகளுக்கு வழங்குங்கள் என்பதே எமது நிலை. நேற்றைய, போராட்டமல்ல எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது மக்களுக்காக என்றும் தொடர்ந்து குரல் கொடுப்போம். கடலட்டை பண்ணை கடந்த மாதம் அனலை தீவுக்கு விஜயம் மேற் கொண்ட போது பருத்தித் தீவில் சட்டவிரோதமாக இருக்கும் பண்ணைகளை அகற்றுமாறு அனலைதீவு மக்கள் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை  வைத்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது போல சட்ட விரோத பண்ணைகளை தான் நாங்கள் இயன்றளவு எதிர்க்கின்றோம். பருத்தித் தீவில் இன்றளவும் சட்டவிரோதப்பண்ணைகள் காணப்படுகின்றது. குறித்த பிரதேச சங்கங்கள் , பிரதேச செயலர் போன்றோர் சட்டவிரோதம் என கூறிய போதும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பருத்தித்தீவில் சட்டவிரோதமாக காணப்படும் 90 ஏக்கர் தொடர்பில் முறையான விளக்கமளிக்கப்பட வேண்டும் .இப்பிரச்சினைதொடர்ந்தும் தீர்க்கப்படாத தருணத்தில் தேசிய தைப்பெங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரும் வேளையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்யும் எண்ணமுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement