• Sep 22 2024

பார்லிமென்டில் இறுக்கி கதைத்துவிட்டு மாலையில் ஒன்டா இருந்து குடிக்கிறது- தமிழ்க் கட்சிகளை வறுத்தெடுத்த யாழ்.பல்கலை துணைவேந்தர்!

Sharmi / Jan 23rd 2023, 4:24 pm
image

Advertisement

நாடாளுமன்றில் எதிர்த் தரப்பை எதிர்த்துப் பேசிவிட்டு மாலையில் ஒன்றாக இருந்து  குடிப்பதாகவும், நக்கினார் நாவிழந்தார் எனவும் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராசா  தெரிவித்தார்.

யாழில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் சேர்ந்து விருந்துபசாரங்களை நடாத்தத் தேவையில்லை. பாராளுமன்றில் எதிர்த்தரப்பை எதிர்த்துப் பேசி விட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து விருந்துண்டு மகிழும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 

இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. அமெரிக்கா , சீனா ,  இந்தியா வல்லரசு நாடுகளாகக் காணப்படும் தருணம்  எமது பூர்வீகத்தொடர்பு இந்தியாவுடனே காணப்படுகின்றது.

இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே  அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இது  தொடர்பில் வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இதுவல்ல. 

இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நேரம் எனவே தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தற்போது தமிழ் கட்சிகள் திரிசூலமாக நிற்கின்றது. எனவே சிவன் வைத்திருக்கும் திரிசூலமாக  காணப்படும் தமிழ் கட்சிகள் எம் மக்களுக்கு சமாதானத்தை கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்தார்.





பார்லிமென்டில் இறுக்கி கதைத்துவிட்டு மாலையில் ஒன்டா இருந்து குடிக்கிறது- தமிழ்க் கட்சிகளை வறுத்தெடுத்த யாழ்.பல்கலை துணைவேந்தர் நாடாளுமன்றில் எதிர்த் தரப்பை எதிர்த்துப் பேசிவிட்டு மாலையில் ஒன்றாக இருந்து  குடிப்பதாகவும், நக்கினார் நாவிழந்தார் எனவும் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராசா  தெரிவித்தார்.யாழில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் சேர்ந்து விருந்துபசாரங்களை நடாத்தத் தேவையில்லை. பாராளுமன்றில் எதிர்த்தரப்பை எதிர்த்துப் பேசி விட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து விருந்துண்டு மகிழும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. அமெரிக்கா , சீனா ,  இந்தியா வல்லரசு நாடுகளாகக் காணப்படும் தருணம்  எமது பூர்வீகத்தொடர்பு இந்தியாவுடனே காணப்படுகின்றது.இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே  அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இது  தொடர்பில் வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இதுவல்ல. இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நேரம் எனவே தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.தற்போது தமிழ் கட்சிகள் திரிசூலமாக நிற்கின்றது. எனவே சிவன் வைத்திருக்கும் திரிசூலமாக  காணப்படும் தமிழ் கட்சிகள் எம் மக்களுக்கு சமாதானத்தை கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement