• May 17 2024

அமெரிக்காவில் மோசடி செய்த சீனாவைச் சேர்ந்த நால்வர் கைது!

Tamil nila / Dec 10th 2022, 10:39 pm
image

Advertisement

அமெரிக்காவில் உள்ளவர்களைக் குறிவைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த நால்வர் மீது அவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது.

 

அந்த மோசடியில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக அவஸ்திரேலியா தெரிவித்தது. இந்த அதிநவீன மோசடியானது உரிமம் வழங்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகத் தளங்களை உட்படுத்தியது என அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை  தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட குறித்த மோசடி குறித்து அமெரிக்க உளவுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் அளித்ததாக யுகுP கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிட்னியில் வசிப்பவர்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

 

குறித்த  மோசடிக் கும்பல் தாங்கள் குறிவைக்கும் நபர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிப் பேசும் முன்னர் வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வேலை வாய்ப்புகள் பற்றிப் பேசிவிட்டு, பிறகு அவர்களை மோசடியில் கும்பல் சிக்கவைத்தது.

 

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மோசடியை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலிய நிறுவனங்களைப் பதிவுசெய்தனர். பின்னர் மோசடி வழி வரும் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டுப் பயன்படுத்தத் திட்டமிட்டதாகக் காவல்துறை கூறியது.

அமெரிக்காவில் மோசடி செய்த சீனாவைச் சேர்ந்த நால்வர் கைது அமெரிக்காவில் உள்ளவர்களைக் குறிவைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த நால்வர் மீது அவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த மோசடியில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக அவஸ்திரேலியா தெரிவித்தது. இந்த அதிநவீன மோசடியானது உரிமம் வழங்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகத் தளங்களை உட்படுத்தியது என அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை  தெரிவித்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட குறித்த மோசடி குறித்து அமெரிக்க உளவுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் அளித்ததாக யுகுP கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிட்னியில் வசிப்பவர்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். குறித்த  மோசடிக் கும்பல் தாங்கள் குறிவைக்கும் நபர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிப் பேசும் முன்னர் வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வேலை வாய்ப்புகள் பற்றிப் பேசிவிட்டு, பிறகு அவர்களை மோசடியில் கும்பல் சிக்கவைத்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மோசடியை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலிய நிறுவனங்களைப் பதிவுசெய்தனர். பின்னர் மோசடி வழி வரும் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டுப் பயன்படுத்தத் திட்டமிட்டதாகக் காவல்துறை கூறியது.

Advertisement

Advertisement

Advertisement