• Nov 23 2024

திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அரச திணைக்களங்களாலும் கபளீகரம்- குகதாசன் ஆதங்கம்..!

Sharmi / Oct 30th 2024, 3:58 pm
image

திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும், அரச திணைக்களங்களாலும் கபளீகரம் செய்யப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசு கட்சி வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் -மணற்சேனை பகுதிக்கான கட்சி காரியாலய திறப்புவிழா இன்று (30) இடம்பெற்றது.

இதில் தமிழ் அரசுக் கட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன்,கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்,கோகுல் ராஜ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.அத்தோடு முன்னால் வீடமை அதிகார சபையின் தலைவரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.ஜனார்த்தனன் உள்ளிட்டவர்களும் கட்சியின் முக்கியஷ்தர்கள்,ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றும் போதே சண்முகம் குகதாஸன் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் 39,500 வாக்குகளை பெற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்தோம்.

தற்போது இன்னும் 10 ஆயிரம் வாக்குகளை பெற்றால்தான் ஒரு உறுப்பினரை பெறமுடியும்.

97 ஆயிரம் தமிழ் வாக்குகள் திருமலையில் உள்ளது.ஏனைய சமூகத்தவர்கள் வாக்களிப்பது போன்று தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்வதில்லை.இது சிக்கலான விடயம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால்தான் உறுப்பினர்களை பெறமுடியும்.

முஸ்லீம் பல கட்சிகள் போட்டியிடுவதால் அவர்களது வாக்குகள் பிரியக் கூடிய சூழல் காணப்படுகிறது.

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் நிருவகிப்பதற்கு சிக்கலான மாவட்டம் திருகோணமலை. இங்கு எமது மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும்,அரச திணைக்களங்களாலும் கபளீகரம்  செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.





திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அரச திணைக்களங்களாலும் கபளீகரம்- குகதாசன் ஆதங்கம். திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும், அரச திணைக்களங்களாலும் கபளீகரம் செய்யப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசு கட்சி வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் -மணற்சேனை பகுதிக்கான கட்சி காரியாலய திறப்புவிழா இன்று (30) இடம்பெற்றது.இதில் தமிழ் அரசுக் கட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன்,கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்,கோகுல் ராஜ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.அத்தோடு முன்னால் வீடமை அதிகார சபையின் தலைவரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.ஜனார்த்தனன் உள்ளிட்டவர்களும் கட்சியின் முக்கியஷ்தர்கள்,ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது உரையாற்றும் போதே சண்முகம் குகதாஸன் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த பொதுத் தேர்தலில் 39,500 வாக்குகளை பெற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்தோம்.தற்போது இன்னும் 10 ஆயிரம் வாக்குகளை பெற்றால்தான் ஒரு உறுப்பினரை பெறமுடியும்.97 ஆயிரம் தமிழ் வாக்குகள் திருமலையில் உள்ளது.ஏனைய சமூகத்தவர்கள் வாக்களிப்பது போன்று தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்வதில்லை.இது சிக்கலான விடயம்.இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால்தான் உறுப்பினர்களை பெறமுடியும்.முஸ்லீம் பல கட்சிகள் போட்டியிடுவதால் அவர்களது வாக்குகள் பிரியக் கூடிய சூழல் காணப்படுகிறது.இலங்கையில் உள்ள மாவட்டங்களில் நிருவகிப்பதற்கு சிக்கலான மாவட்டம் திருகோணமலை. இங்கு எமது மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும்,அரச திணைக்களங்களாலும் கபளீகரம்  செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement